இறால் மொறுவல்

Loading...

இறால் மொறுவல்இறால் வறுவல் என்று தான் சொல்வார்கள். ஆனால் அது என்ன “மொறுவல்”? நல்ல மொறு மொறுப்பான இறால் கறி வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
இறால் மொறுவல்

தேவையான பொருட்கள்:
1. தோலுரித்த இறால் – 1/2 கிலோ
2. ஒரு பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
3. இரண்டு சிறிய தக்காளிகள்(சிறிய துண்டுகளாக நறுக்கியது)
4. இரண்டு பச்சை மிளகாய் – நறுக்கியது
5. இஞ்சி-பூண்டு விழுது – இரண்டு மேசைக் கரண்டி
6. மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
7. கொத்தமல்லித் தூள் – மூன்று தேக்கரண்டி
8. கருவேப்பிலை – ஒரு சிறிய கொத்து
9. மஞ்சள் பொடி – இரண்டு தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு

செய்முறை:

மஞ்சல் தூள் கலந்து வதங்கும் இறால்

தண்ணீர் வற்ற வதங்கிய இறால்
இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள் கலந்து, எண்ணை விடாமல் வாணலியில் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

தே.பொருட்களுடன் வதங்கும் இறால்

ஊறவைக்கப்பட்ட இறால்
வதங்கிய இறாலுடன், தேவையான பொருட்கள் அத்தனையையும்
(2 to 10) கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணை விட்டு சூடானதும், இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக வதங்கி சேர்ந்து வரும். சற்று மசாலா போல் வேண்டுமென்றால் அந்தப் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடலாம். நன்றாக மொறு மொறுப்பாக வேண்டுமென்றால், இன்னும் கூடுதலாக வதக்கினால் மொறு மொறு பதம் வந்துவிடும்! இந்த இறால் வறுவலை, நேற்றைய பதிவில் செய்த சொதியுடன் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply