இரவில் தூக்கம் வரவில்லையா! கவனம் இன்சோம்னியாவாக இருக்கலாம்

Loading...

இரவில் தூக்கம் வரவில்லையா! கவனம் இன்சோம்னியாவாக இருக்கலாம்நம் அனைவருக்கும் உணவு எந்தளவு முக்கியமானதோ அதே அளவு தூக்கமும் முக்கியமானதே.
தூக்கம் என்பது உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை வழங்கக்கூடியது. அதே போன்று தூக்கம் என்பது எப்போது பிஸியாகவே இருக்கும் மூளைக்கும் சிறிது ஓய்வை தரக்கூடிய ஒன்றாகும்.

ஆனால் நம்மில் பலரும் தூக்கம் வரவில்லை என்று தவித்து வரலாம். அதற்கு காரணம் இன்சொம்னியாவாக(Insomnia) கூட இருக்கலாம்.

இன்சொம்னியா என்பது தூங்குவதற்கு கடினப்படுவது அல்லது தூங்காமலேயே விழித்திருக்கும் ஒரு நிலையாகும்.

அறிகுறிகள்

இன்சொம்னியா நிலையில் இருப்பவர்களால் எளிதில் தூங்க முடியாது.

இரவில் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டால் மறுபடியும் தூக்கம் வருவது கடினமாக இருக்கும்.

தூங்கி எழும்போது களைப்பாக இருக்கும். இவையெல்லாம் இன்சொம்னியாவின் அறிகுறியாகும். இதிலும் இரண்டு வகைகள் உள்ளன.

அதாவது, வேறு எந்த நோயுடனும் தொடர்பு இல்லாமல் தூங்குவதில் பிரச்சனை ஏற்பட்டால் அது முதன்மை இன்சொம்னியா என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் ஆஸ்துமா, மன அழுத்தம், புற்றுநோய், மது உட்கொள்வது ஆகியவற்றின் காரணமாக தூக்கம் வரவில்லை என்றால் அது இரண்டாம் இன்சொம்னியா என்று கூறப்படுகிறது.

காரணங்கள் என்ன?

நோய் காரணமாகவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் சிலருக்கு இன்சொம்னியா ஏற்படக்கூடும்.

அதே போன்று பணியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நெருங்கியவர்களின் பிரிவு போன்றவை காரணமாகவும் நமது தூக்கம் பாதிப்படையக்கூடும்.

தூக்க நேரத்தை அடிக்கது மாற்றுவது காரணமாகவும் நமது தூக்கம் குறையத்தொடங்கும். எனவே அவர்கள் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தூங்கி வழிவார்கள். எப்போதும் களைப்பாகவே இருப்பார்கள்.

மேலும், இன்சொம்னியா காராணமாக நியாபக மறதி போன்றவைகளும் ஏற்படும்.

சிகிச்சைகள் என்ன?

பொதுவாக இத்தகைய தூக்கமின்மைக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படாது. ஒரு சில பயிற்சிகள் மூலமே இதனை குணப்படுத்தலாம்.

பொதுவாக தூங்குவதற்கு என்று குறிப்பட்ட நேரத்தை வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அந்த நேரத்துக்குள் தூங்க சென்றுவிடுங்கள். மேலும், சிகரெட், மது போன்றவற்றை தூங்குவதற்கு முன்பாக எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

போதுமான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதை தவித்துவிடுங்கள்.

இல்லையென்றால் தூக்கத்தின் தன்மை பாதிக்கப்படும்.நாம் தூங்கும் இடத்தை சுத்தமாகவும், இருட்டாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

அதே போன்று சத்தம் ஏதும் அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். புத்தகம் படிப்பது, இசையை கேட்பது போன்றவை மூலம் மனதை அழுத்தத்தில் இருந்து காப்பாற்றலாம்.

முடிந்த வரை கவலைகள், வருத்தங்கள் ஆகியவற்றை தூங்கும் போது அசைப்போடாதீர்கள். இதை தொடர்ந்து பின்பற்றிவந்தால், நாளடைவில் தூக்கமின்மை காரணமாக நமக்கு ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply