இயற்கை முறை கொசு விரட்டி

Loading...

இயற்கை முறை கொசு விரட்டிமழைக் காலங்களில் மனிதனை வாட்டி எடுப்பது ஜலதோஷம் மட்டுமல்ல. எக்குதப்பாய் பெருகி நிற்கும் கொசுக்களும் தான். நம்மை தூங்கவிடாமல் பாடுபடுத்தும் இந்த கொசுக்கள் நமக்கு பல்வேறு விதமான நோய்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றன.

அதில் இருந்து தப்பித்துக்கொள்ள நாம் பல்வேறு ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகிறோம். இவை எல்லாமே விஷத்தன்மை உள்ளவை. ஆனால் இவற்றை நாம் சாதாரணமாக தினமும் உபயோகிக்கிறோம். கொசுவர்த்திச் சுருள், கொசு விரட்டும் திரவம் போன்ற எதுவுமே மனிதனின் தினசரி உபயோகத்திற்கென்று உருவாக்கப்பட்டவை அல்ல. இவற்றை மேற்கத்திய நாடுகளில் அதிக மழை பெய்து நிறைய கொசுக்கள் வரும் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

மற்ற நாட்களில் இதை தொடக்கூட மாட்டார்கள். ஆனால், நாம் தினமும் இவற்றை சாதாரணமாக பயன்படுத்துகிறோம். இவை, நமக்கு ஆஸ்துமா, இளைப்பு, மூச்சிறைப்பு மற்றும் வேறு சில உடல்நலக் கோளாறுகளையும் கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகமாக பாதிக்கும். இப்படி செயற்கை முறையில் உடலைக் கெடுத்து கொசுவை விரட்டுவதற்கு பதிலாக இயற்கை முறையில் கொசுவை விரட்டலாம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இதற்கு கொஞ்சம் நொச்சி இலை, வேப்பிலை, சாம்பிராணி மட்டும் போதும். இவற்றைக்கொண்டு இயற்கை முறையில் புகை மூட்டம் போட்டு விரட்டலாம். இதற்கு ‘நாக்அவுட் பாய்சன்‘ என்று பெயர். இது கொசுக்களை மூச்சுத்திணறச் செய்து, மயக்கமடைய வைத்து இறக்கச் செய்துவிடுகிறது. இந்த முறையில் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் முற்றிலுமாக அழித்துவிடலாம். நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் எப்போதும் நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் வைத்திருப்பார்கள்.

இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், நாளாவட்டத்தில் அந்த முறை கிராமங்களில் கூட மறைந்து விட்டது. இப்போது நாம் வீடுகளில் பயன்படுத்தி வரும் நவீன ரசாயன முறையை விட நமது பாரம்பரிய முறை சிறந்தது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதன் மூலம் நம்மையும் பாதுகாப்பான முறையை நோக்கி நகர்த்திக்கொள்வோம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply