இயற்கை முறையில் எடையை குறைக்க….!

Loading...

இயற்கை முறையில் எடையை குறைக்க....!காலை எழுந்ததும், காபி, டீ அருந்துவதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு. அடுத்ததாக சிறிது கிரீன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்காத காபி / டீ.
காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது கீரை / காய் ஸ்டஃப் செய்த தோசை. தொட்டுக்கொள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லி சட்னி (தாளிக்காமல்) அல்லது சாம்பார்.

அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கரு.

முற்பகலில், வெண்ணெய் எடுத்த மோர் ஒரு கிளாஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸ் அல்லது இளநீர் அல்லது காய்கறி சூப் ஒரு பவுல்.

மதிய உணவுக்கு, அவரவர் கை அளவுக்கு நான்கு கைப்பிடி அளவு சாதம். பூசணி, பீர்க்கை, புடலை, சுரைக்காய், காலிஃப்ளவர் ஏதாவது காய்கறி கூட்டு. ஏதேனும் ஒரு கீரை.

பிற்பகலில் லோ கிளைசமிக் இண்டெக்ஸ்’ கொண்ட சோயா, ராஜ்மா, சிறிய கறுப்பு கொண்டைக்கடலை இவற்றில் ஏதாவது ஒரு சுண்டல் 2 கைப்பிடி அல்லது வறுத்த சோயாபீன்ஸ் 2 கைப்பிடி.

இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கு முன், காளான், காய்கறி அல்லது தக்காளி சூப் 2 பவுல். ஒரு மணி நேரம் கழித்து, பப்பாளி, ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம். அதனுடன், காய்கறிகள் சேர்த்த சாலட் ஒரு பவுல்.

உடற்பயிற்சி:
தினமும் 25 நிமிடம் யோகப்பயிற்சி, கூடவே மூச்சுப்பயிற்சியும் முக்கியம்.

அதுமட்டுமின்றி, பொதுவாக எப்போதுமே நிற்கும்போதும், நடக்கும்போதும் பேசும்போதும் வயிற்றை உள்ளிழுத்தபடியே இருந்து பழகவேண்டும். அதுவே ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதனால் வயிற்றுத் தசைகள் டோன்’ ஆகி, தொப்பை குறையும்.

இதை ஒரு மாதம் முயற்சித்து பாருங்கள் …. நீங்களும் இடையழகியே… அதில் மாற்றுக்கருத்தில்லை….!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply