இனி விமானங்களை தவற விடவேண்டிய அவசியமே இல்லை: உதவி செய்ய வருகிறது ரோபோ

Loading...

இனி விமானங்களை தவற விடவேண்டிய அவசியமே இல்லை  உதவி செய்ய வருகிறது ரோபோஅனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வரும் கணினிகள் போன்றே ரோபோக்களும் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துவருகின்றன.
இதற்கிணங்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் விமானங்களை தவற விடுவதை தவிப்பதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த ரோபோவிற்கு Spencer எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், பல மொழிகளை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் வடிவமைப்பில் ஐந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், வியாபார நிறுவனங்களும் பங்குவகிக்கின்றன.

இதனை பரீட்சார்த்தமாக முதன் முதலாக ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டது, வருகிற மார்ச் மாதம் இறுதி பரிசோதனை நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply