இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

Loading...

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்கஇந்த காலத்து புதுமண தம்பதிகள் பெரும்பாலும் திருமணம் ஆன மறுவருடமே குழந்தை பெற்றுக் கொள்வதில் உடன்படுவது இல்லை.

நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் மேன்மை அடையும் வரை குழந்தை வேண்டாம் என கருத்தரிப்பதை தள்ளி போட வேண்டாம்.

நாளை உங்களிடம் பணம் சேரலாம் ஆனால், இழந்த வயதோ, கருத்தரிக்க தேவையான உடல் வலுவோ இழக்க நேரிடும்.

வாழ்க்கையில் பொருளாதார அளவில் உயர்ந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தவிர்த்து விடுங்கள். முப்பதுக்கு மேல் பிள்ளை பெற்றுக்கொள்வது பெண்ணுக்கு உடல் ரீதியாக சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சிலர் கொஞ்ச நாட்கள் கணவன் மனைவியாக சந்தோசமாக இருந்துவிட்டு பிறகு தாய், தந்தையாக ஆகலாம் என்று எண்ணுகிறார்கள். உண்மையில், கணவன் மனைவி என்ற உறவை விட, தாய், தந்தை எனும் உறவில் தான் மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது.

பெண்களின் உடல்நிலையில் அல்லது உடல் சக்தியில் குறைவு என்ற பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடலாம். ஆனால், வேறு காரணங்கள் கொண்டு தள்ளி போடுவது பின்னாட்களில் பெண்களுக்கு பிரச்சனையாக தான் முடியும்.

சிலர் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முதிர்ச்சி இல்லை, வளர்க்க தெரியாது என்றெல்லாம் கூறுவது உண்டு. உண்மையில் இங்கு யாருமே குழந்தையை வளர்க்க கற்றுக் கொண்டு பெற்றுக் கொள்வது இல்லை. இது போன்ற சாக்குப்போக்கு கூறுவது முதலில் நீங்கள் சந்தோசமாக இருக்க உதவலாம், ஆனால் காலம் கடத்திய பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரும் போது தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் தான் மிஞ்சும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply