இது சுறா மீன்களிடம் இருந்து உங்கள் உயிரைக் காப்பாற்றுமாம் ?

Loading...

இது சுறா மீன்களிடம் இருந்து உங்கள் உயிரைக் காப்பாற்றுமாம்“த கிரேட் வைட் ஷாக்” என்று சில சுறா மீனை அழைப்பார்கள். அதாவது வெள்ளை நிறம் கொண்ட சிலவகை சுறா மீன்கள் ஆகும். இது தான் மனிதர்களை கடித்து குதறும் சுறாமீன்கள் ஆகும். இவை பெரும்பாலும் வெப்பம் கூடிய கடலில் காணப்படுகிறது. அத்தோடு இவை ஏனைய மீன்களைப் போல அல்லாது கடல் கரைக்கும் வந்து தமது தாக்குதலை நடத்துகிறது. இதனால் கடல் கரையில் உள்ளவர்களை கூட இது கடித்து உண்கிறது. குறிப்பாக அவுஸ்திரேலிய கடற்கரைகளில் இவ்வகையான சுறா மீன்கள் அதிகம் உள்ளது. நீண்ட நாளாக இவ்வகையான மீன்களிடன் இருந்து தப்புவது எப்படி என்று பலர் ஆராய்ந்து வந்துள்ளார்கள்.
ஆனால் தற்போது அவுஸ்திரேலியக் கம்பெனி ஒன்று, புதுவகையான சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதில் மின்சாரம் சேமிக்கப்பட்டு உள்ளது. சுறா மீன் உங்களை தாக்க வருகிறது என்றால் நீங்கள் காலில் அணிந்துள்ள அந்த சாதனத்தில் உள்ள பட்டன் ஒன்றை அழுத்தினால் போதும். நீரில் மின்சாரம் பாயும். இதனால் சுறா மீன் உங்களுக்கு அருகில் வார தயங்கும். அட நீரில் மின்சாரமா ? அப்படி என்றால் அதனை அணிந்துள்ள நபருக்கும் அல்லவா மின்சாரம் தாக்கும் என்று குறுக்கு கேள்விகளை எம்மிடம் கேட்க்க வேண்டாம்.
அணிந்திருக்கும் நபருக்கு ஷாக் அடிக்காது என்கிறார்கள் இதனை விற்கும் கம்பெனி நபர்கள். மனிதர் மின்சாரத்தை உணர்வதை விட, நீரில் வசிக்கும் மீன்கள் அதனை உணர்வது கூடுதலாக இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply