இதயத்திற்கு பாதுகாப்பு தரும் உணவுகள்

Loading...

இதயத்திற்கு பாதுகாப்பு தரும் உணவுகள்இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், சமுதாய மாற்றங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம். சீரான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பெறலாம்.

ஓட்ஸ் என்றதுமே நமது நினைவுக்கு வருவது உடல் எடையை குறைக்கும் என்பதுவே, அதுமட்டுமின்றி இதயத்திற்கும் சிறந்த உணவாக உள்ளது. இதய நோயாளிகள் இதனை காலை உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன், சீரான எனர்ஜியையும் தருகிறது. கோதுமை, பார்லி, பருப்பு மற்றும் தானிய வகைகள் இதயத்திற்கு சிறந்த உணவாகும்.

இவைகளில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் மெக்னீசியம் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் இதயநோய்கள் மற்றும் இரத்த திட்டுகளின் பாதிப்பை குறைக்கிறது. பாதாமில் உள்ள ஒமோகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் இதய நோய்களை குறைப்பதுடன், மிகச்சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.

எனவே பழச்சாலட்டுகள், மில்க் ஷேக்குகள் மற்றும் வெறுமனே கூட சாப்பிடலாம். இதேபோன்று வால்நட்டில் உள்ள வைட்டமின் இ, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் இருப்பதால் இதயத்திற்கு சிறந்த உணவாகும். பச்சை இலைக் காய்கறிகளில் குறைந்தளவே கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் ஆரோக்கியமான இதயத்திற்கு சிறந்த உணவுகளாக உள்ளன. இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply