ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? வைட்டமின் சி அவசியம்

Loading...

ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா  வைட்டமின் சி அவசியம்அழகான, ஆரோக்கியமான கூந்தலை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதற்காக எத்தனையோவிதமான குறிப்புகளை படித்து அதை தொடர்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் முடி உதிர்வுப் பிரச்சினை அவர்களை கவலையில் மூழ்கடித்து விடும். ஆரோக்கியமான கூந்தலுக்கு சத்தான உணவுகளை உண்ணவேண்டும். உடலில் இரும்புச்சத்து, கால்சியம்சத்து, புரதச்சத்து குறைபாடு இருந்தாலே கூந்தல் உதிர்வு பிரச்சினை ஏற்படும். எனவே ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பவர்கள் உண்ண வேண்டிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளனர்.
பருப்பு, பயறு வகை உணவுகள்
பருப்பு, பயறு வகை உணவுகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது உடலின் ஜீரணசக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய், நீரிழிவு, உடல்பருமன் போன்றவைகளை தடுக்கும் இந்த சூப்பர் உணவுகள் ஆரோக்கியமான கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வைட்டமின் சி
வைட்டமின் சி உணவுகளில் கொலோஜன், புரதம் கூந்தலின் வேர் கால்களை வலுவூட்டுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரீஸ், கொய்யா போன்ற பழங்களில் சிறப்பான வைட்டமின் சி ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை கிரகித்துக்கொள்ளும், இதனால் கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
ப்ரௌன் அரிசி
ப்ரௌன் அரிசியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது கூந்தலின் பளபளப்பிற்கு அதிகம் உதவிபுரிகிறது. மேலும் ப்ரௌன் அரிசியில் உயர்தர வைட்டமின்களும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. இது கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றது.
பருப்பு தால்
உண்ணும் உணவில் துவரம்பருப்பு தால், பாசிப்பருப்பு தால் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் அதிக அளவு புரதமும். பொட்டாசியம், மங்னீசியம், போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது.
கால்சியம் உணவுகள்
உடம்பில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூந்தல் உதிர்வு பிரச்சினை ஏற்படும். எனவே பால், பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதோடு பளபளப்பான கூந்தலும் கிடைக்கும். எனவே கூந்தல் உதிர்கிறதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply