ஆண்மை குறைவை உணர்த்தும் சில அறிகுறிகள்

Loading...

ஆண்மை குறைவை உணர்த்தும் சில அறிகுறிகள்மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும் போதிய அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

ஆண்களின் உடலில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும். குறிப்பாக இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இவை ஒரு ஆணின் உடலில் குறைய ஆரம்பித்தால், அவை உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும்.

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு கண்டுபிடித்து, உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், அவற்றை உடனே குணப்படுத்த முடியும். ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது வெளிப்படும் அறிகுறிகளை பார்க்கலாம்.

டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம். மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும்.

குறைவான எனர்ஜி உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும். ஆனால் நிறைய ஆண்கள் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகத் தான் எனர்ஜி குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் உடலில் எப்போதுமே எனர்ஜி இல்லாதது போல் உணர்ந்தால் மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறாவிட்டால், உடலானது இன்னும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

ஆண்களின் உடலில போதிய டெஸ்டோஸ்டிரோன் இல்லாலிட்டால், ஆற்றல் மற்றும் வலிமை இழந்தது போல் எப்போதும் சோர்வோடு இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சிறு வேலை செய்யக்கூடாத முடியாத அளவில், உடல் வலிமையிழந்தது போல் இருக்கும். குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, தைராய்டு குறைபாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பாதிக்கக்கூடும்.

மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதனை போதிய சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் குணப்படுத்தலாம். முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது. துணையுடன் உறவில் ஈடுபடும் போது போதிய அளவில் விறைப்புத்தன்மை இல்லாவிட்டால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும். அப்போது உடனே மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சை பெறுவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply