ஆண்ட்ராய்டு மொபைல் – ஆபத்தா ? ஸ்மார்ட்ஃபோன் ஆபத்து -வீடியோ ஆதாரம்

Loading...

ஆண்ட்ராய்டு மொபைல் – ஆபத்தா   ஸ்மார்ட்ஃபோன் ஆபத்து -வீடியோ ஆதாரம்இப்போது மொபைல் ஃபோன் களுக்கும் ஆபரேடிங்க் சிஸ்டம் வந்துவிட்டது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த இயங்கும் தளம் மிக முக்கியம். நோக்கியாவுக்கு அதன் பிரத்யேக ப்ளாட்வ்பார்ம் இருக்கிறது. சாம்சங் அதிகம் சார்ந்திருப்பது ஆன்ட்ராய்டு ப்ளாட்ஃபார்மில் தான். ஆப்பிள் ஐ ஃபோனுக்கு ஆப்பிளின் பிரத்யேக பிளாட்ஃபார்ம் இருக்கிறது. ஆனால் நிறைய ஃபோன்கள் கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஆன்ட்ராய்டு ப்ளாட்ஃபார்மில் தான் இயங்குகின்றன. ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சிமிகு தகவல் வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன்கள் அல்லது ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் அவற்றை பயன்படுத்துபவரின் தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து சேகரித்து அனுப்பிவைக்கும் நிரலிகள் நிறுவப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. குறைந்த அளவிலான அணுகலினால் இயங்கும் இந்த நிரலிகளால் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
‘Rootkit’ அல்லது Carrier IQ என்று பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிரலிகள் நிறுவப்பட்டுள்ள போன்களை பயன்படுத்தும் போது எந்த பொத்தாங்களை (key) அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். எஸ்.எம்.எஸ் களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எவை போன்ற என்னும் பல தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன்கொண்டவையாகும்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. சிலர் மொபைல் மூலமே வங்கிக் கணக்கை இயக்குகின்றனர். சிலர் தனது மிகவும் பாதுகாப்பான விபரங்களைக் கூட மொபைலில் ஸ்டோர் செய்கிறார்கள். இது போன்ற பிரத்யேக விஷயங்கள் லீக் ஆனால் என்ன செய்ய? ஆண்ட்ராய்டால் ஆபத்தா? கீழ்க்கண்ட வீடியோக்களைப் பாருங்கள் ….

வீடியோ விளக்கம்

வீடியோ விளக்கம் 1

Loading...

Leave a Reply