ஆண்களே ஷேவிங் செய்த பின் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க வழிகள்

Loading...

ஆண்களே ஷேவிங் செய்த பின் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க வழிகள்சில ஆண்கள், ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம், அவர்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்ய தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க ஒருசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.
* ஷேவிங் செய்யும் முன், முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் சுடுநீரில் கழுவினால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுடுநீரினால் சருமத்திற்கு அருகில் உள்ள சிறு இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புள்ளது.
* ஷேவிங் ஜெல் அல்லது க்ரீமை கைவிரலால் தடவி, வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும். ஏனெனில் கன்னத்தில் வளரும் முடியானது ஒவ்வொரு திசையில் வளர்வதால், வட்ட வடிவில் தேய்த்து விடும் போது, அனைத்து பகுதியிலும் க்ரீம் பரவி, கன்னங்களில் உள்ள முடி எளிதில் வெளியே வருவதற்கு ஏற்றவாறு வழி செய்யும்.
* பல ஆண்களும் சற்று அழுத்தி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய மார்டன் ரேசர்கள் லேசான அழுத்தத்தைக் கொடுத்தாலே, முடி முழுவதும் வெளியேறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாகக் கொடுப்பதால், எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.

* தாடியை இன்னும் சௌகரியமாக எடுக்க வேண்டுமானால், சுடுநீர் குளியலை மேற்கொண்ட பின் இறுதியில் எடுக்கலாம். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து மென்மையாக இருக்கும். இப்போது எடுப்பதன் மூலம் தாடியை மிகவும் சுலபமாக நீக்கலாம்.
* சில ஆண்கள் முடி வளரும் திசைக்கு எதிர்திசையை நோக்கி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியேறும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால், சருமத்தில் வெட்டுக்காயங்களுடன், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். எனவே எப்போதுமே முடி வளரும் திசையை நோக்கியே ஷேவிங் செய்யுங்கள்.
* சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஷேவிங் லோஷன் பயன்படுத்தினால், அதனால் மேலும் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். எனவே ஷேவிங் லோசன் பயன்படுத்துவதற்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் ஷேவிங் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சியும் தடுக்கப்படும், எரிச்சல் மற்றும் அரிப்பும் வராமல் இருக்கும்.
* ஷேவிங் செய்து முடித்த பின் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோசனில் ஆல்கஹால் இருப்பதால், அது சருமத்தை வறட்சியடைச் செய்வதோடு, எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆஃப்டர் ஷேவ் பாம் அல்லது மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply