ஆச்சரியங்கள் நிறைந்த மனித உடல்

Loading...

ஆச்சரியங்கள் நிறைந்த மனித உடல்இயற்கையின் படைப்பு எப்போதும் ஒரு வித அலாதியான, ஆச்சரியம் நிறைந்தது. அந்த ஆச்சரியங்கள் மனித உடலிலும் நிறைய இருக்கிறது. நமது நுரையீரலில் மட்டும் 30 லட்சம் ரத்த நாளங்கள் உள்ளன. இந்த ரத்த நாளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் அதன் நீளம் 2,400 கிலோ மீட்டர் நீளம் இருக்கும்.

ஒவ்வொரு ஆணின் உடலிலும் தினந்தோறும் ஒரு கோடி புதிய விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. அத்தனையும் உயிர் பெற்றால் 6 மாதத்தில் அந்த ஒரு ஆணே பூமியை மக்களால் நிரப்பிவிட முடியும். அதேபோல் ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட 5 லட்சம் கருமுட்டைகள் இருக்கின்றன. ஆனால், அவை மாதத்திற்கு ஒன்றாக முதிர்ச்சியடைவதால் தனது வாழ்நாளில் 400க்கும் சற்று அதிகமான முட்டைகள் மட்டுமே உயிரை உருவாக்கும் வாய்ப்பை பெறுகின்றன. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டை. அதே போல் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. கருமுட்டையைவிட விந்தணு 8 மடங்கு சிறியது.

சராசரியாக ஒரு பெண்ணின் உயரம், ஆணின் உயரத்தைவிட 5 அங்குலம் குறைவாக இருக்கும். மனிதனின் உயரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பகலில் இருப்பதைவிட இரவில் அவனது உயரம் 8 மில்லி மீட்டர் அதிகரிக்கிறது. மீண்டும் காலையில் அவன் எழுந்ததும் பழைய உயரத்துக்கே வந்துவிடுவான். பகலில் உயரம் குறைவதற்கு காரணம் புவியீர்ப்பு விசையே. அதுதான் மனிதன் நிற்கும் போதும், உட்காரும் போதும், எலும்புகளை கீழ் நோக்கி இழுப்பதால் உயரம் குறைகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 50 டன் உணவை உட்கொள்கிறான். 5 லட்சம் லிட்டர் நீரை பருகுகிறான். மனிதனின் ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. ஒரு நாளில் 1.5 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. கண்களில் இருக்கும் தசை ஒரு நாளில் ஒரு லட்சம் முறை அசைகிறது. இந்த அசைவை அப்படியே நாம் கால்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால் நாம் குறைந்தது 80 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

மனித உடலில் உள்ள வெப்பம் 30 நிமிடங்களில் அரை கேலன் தண்ணீரை கொதிக்க வைப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரேயொரு ரத்த அணு மனித உடல் முழுவதும் சுற்றிவர 60 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. நாம் ஒரு அடி எடுத்து வைக்க உடலிலுள்ள 200 தசைகள் வேலை செய்கின்றன. நமது ஒரு ஜோடி பாதங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.

நமது கால்களில் மட்டும் ஆயிரம் கோடி பாக்டீரியாக்கள் இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய தகவல் களஞ்சியமாக கருதப்படும் பிரிட்டானிகா களஞ்சியத்தைவிட, 5 மடங்கு கூடுதலான தகவலை நமது மூளையால் சேமித்து வைக்கமுடியும். இவை அனைத்தும் மனித உடலின் ஆச்சரியங்களில் ஒரு சில மட்டுமே! இன்னும் ஏராளமானவை மனித உடலில் அடங்கி உள்ளன!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply