ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்

Loading...

அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஈஸ்டன் ஐ என்ற பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். இதில் டாப் 10 பிரபலங்களில் 10வது இடத்தை பாகிஸ்தானின் மஹிரா கான் பிடித்துள்ளார், மற்ற 9 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,01. பிரியங்கா சோப்ரா: தற்போது முதல் இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 வரிசையில் தொடர்ந்து வருகிறார். இவர் இவ்வாறு தக்க வைத்ததற்கு மேரிகோம், தில் தக்னே டோ போன்ற படங்களே காரணமாக உள்ளன. முதல் இடத்தை பிடித்த இந்த செக்ஸி லேடிக்கு வெறும் 33வயது தான் ஆகிறது.02. சனாயா இரானி: மாடலாக வந்து பின்னர் ஃபனா படத்தின் மூலம் திரைப்படத்திற்கு அறிமுகமானவர் சனாயா இரானி. மெல்லி ஜாப் ஹம் தும் சீரியலில் நடித்ததும் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக் கொண்டார். இவரது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. இவருக்கு இரண்டாவது இடத்தை பெற்று தந்தது இந்த வருடம் வெளியான ”ஜலக் டிக்கால ஜா” என்ற நிகழ்ச்சி தான்.03. டிராஸ்டி தாமி: இவருடைய தொடர் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இவரை பாலிவுட் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாற்றியது. ”சயான் தில் மெயின் ஆனா ரே” என்ற ஆல்பம் இவரை பல மடங்கு பிரபலமாக்கிவிட்டது. இப்போது மூன்றாம் இடத்தில் இருக்கும் இவர் 2012ம் ஆண்டு 3ம் இடத்திலும், 2014ம் ஆண்டு 2ம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
04. தீபிகா படுகோன்: ஓம் சாந்தி ஓம் படத்தில் ஆரம்பித்த வெற்றி இன்று வரை தொடர்கிறது தீபிகா படுகோனிற்கு. இப்போது இவரின் சம்பளம் 7 முதல் 8 கோடியாக வாங்குகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமஸா. இவரின் கவர்ச்சி குத்துப்பாடல்களில் நம் ஏராளம் காணலாம்
05. காத்ரீனா ஃகைப்: ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டு வருடங்களாக இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூருடன் காதல் கொண்டு சுற்று திரிந்தவர்.
06. நியா ஷர்மா: பாலிவுட்டின் மிகமுக்கியமான டிவி நடிகை நியா. டிவி ரசிகர்களின் டாப் மோஸ்ட் ஃபேவரைட் நடிகை.07. கரீனா கபூர்: முப்பத்தைந்து வயதிலும் இன்றும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் நடிகை கரீனா கபூர்கான். 2001ல் அபிஷேக் பச்சனுடன் ரிஃவ்யூஜ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சினிமா பின்னணியிலிருந்து வந்ததால் எளிதில் உச்சத்தைத் தொட்டவர். இந்த வருடம் வெளீயான கப்பர் இஸ் பேக், பஜ்ரங்கி பைஜான் படத்தில் கரீனா பேசப்பட்டதால் ஆசிய செக்ஸி லிஸ்டில் ஏழாவது இடம் இவருக்கு.08. கவ்கர் கான் இந்தி, தெலுங்கு, பஞ்சாபி என்று சுற்றிலும் பிஸியாக இருக்கும் ஹாட் நடிகை கவ்கர் கான். இந்த வருடம் மட்டும் நான்கு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஓவ்வொரு படமும் ஒவ்வொரு வெரைட்டியில் கவர்ச்சியில் ஈர்த்திருக்கிறார்.09. சோனம் கபூர்: அழகிலும் கவர்ச்சியிலும் ஒருசேர நடித்து க்ளாசிக் ஹாட் நடிகையாக வலம் வருபவர் சோனம்கபூர். டோலி கி டோலி, பிரேம் ரத்தன் தனபாயோ இவ்விரு படங்களும் இந்தவருட வரவு. அதுமட்டுமின்றி ஹிரித்திக் ரோஷனுடன் இவர் நடித்த தீரே தீரே பாப் ஆல்பம் இணையத்தில் வைரல் ஹிட்.10. மஹிரா கான்: ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் டாப் 10ல் இடம்பிடித்திருக்கும் மஹிரா கான் பாகிஸ்தான் நடிகை. டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கி இப்போது படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். ஷாருக்கான் நடிக்கும் ரேஸ் படத்தில் ஷாருக்கிற்கு மனைவியாக நடிக்கிறார்.
ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply