அவல் பிரியாணி

Loading...

அவல் பிரியாணிசுவையான அவல் பிரியாணியைச் சமைத்து ருசிக்க‍ லாம் வாங்க! இதைச் சாப்பிட்டவர்கள், ஆஹா! சுவை யோ சுவை என்று இவ்வ‍ளவு ருசியாக இருக்கிறதே எப்ப‍டி உங்களால்

இது முடிகிறது என்று உங்களிடம் பாடம் கற்றுக்கொள் வார்கள். இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அவல் பிரியாணி (தேவையானவயும், செய்முறையும்)

அவல் பிரியாணி

தேவையானவை:

கெட்டி அவல் – ஒரு கப்
கடலை மாவு – கால் கப்
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
எலுமிச்சைச் சாறு -1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு சிறிய துண்டு
வெங்காயம் – 1
பிரிஞ்சி இலை – ஒன்று,
ஏலக்காய், லவங்கம் – தலா 2
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை சுத்தம்செய்து, பொடியாகநறுக்கவும். பட் டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டிக்கொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும். அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்பு த்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கிஸ இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய்சேர்த்து சிவக்கவறுக்கவும். அதனுடன் அவல் கலவையை சேர்த்துக்கிளறவும். வெந்ததும், கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கிளறி, கடைசியாக எலுமிச்சைச்சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த அவல் பிரியாணியை, தக்காளிக் குழம்போடு சூடாகச் சாப்பிட்டால்ஸ சுவையோ சுவை!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply