அழகான பளபளப்பான தோற்றத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்?

Loading...

அழகான பளபளப்பான தோற்றத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்அழகான பளபளப்பான தோற்றத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? பெண்கள் எல்லோருக்கும் மினுமினுப்பான, மற்றவர் கண்ணுக்கு பொலிவான தோற்றத்தை பெற்றிருக்கவே விருப்பமாக இருக்கும். இதோ வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு உங்களை அழகு படுத்த சில ஆலோசைனைகள்.
உருளைகிழங்கு – உருளைக்கிழங்குச் சாறை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
முட்டை வெள்ளைகரு – முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும்,அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
ஒலிவ், தேங்காய் எண்ணெய் – ஒலிவ் எணணெயை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது.
அடிக்கடி சில மணிநேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும். ஒலிவ் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பசை போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் எனத் தோற்றம் தரும்.
கரட், பீட்ரூட் – ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப் பார்க்காது.
ஆமணக்கு எண்ணெய் – இரவு நேரங்களில் முகம், கை, கால் முட்டிகளில் ஆமணக்கு எண்ணெயை தடவி வைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வறண்ட தன்மை நீங்கும். சருமம் மென்மையாகும்.
தேன் – குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.
அயடீன் உப்பு – சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயடீன் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.
வெள்ளரிக்காய் – வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும்.முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும், கருவளையம் போகும்.
துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் பூச, முகம் பொலிவடையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply