அம்மா ஆன பின்னும் அழகாய் மின்னும் ஐஸ்வர்யா! ரகசியம் என்ன?

Loading...

அம்மா ஆன பின்னும் அழகாய் மின்னும் ஐஸ்வர்யா! ரகசியம் என்னதங்கத்துகளைப் போல மின்னும் நிறம், வானுலகில் இருந்து பூவுலகிற்கு இறங்கி வந்த தேவதை பின்னர் தண்ணீரில் குதித்து மூழ்கி எழுகிறாள். இது விளம்பரம்தான் ஆனால் அந்த விளம்பரத்தை விட அதில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாராய் மீதுதான் அனைத்து கண்களும் நிலைத்திருக்கின்றன.
உலக அழகியாக முடிசூட்டப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனாலும் ஐஸ்வர்யாராய் பேரழகிதான். அம்மா ஆனா பின்னும் அழகு கூடியுள்ளதே தவிர குறையவில்லை. குழந்தை பிறந்த பின்னர் குண்டாகிவிட்டார் ஐஸ்வர்யாராய், இனி அவ்வளவுதான் என்று ஊடகங்களில் பல செய்திகள் வெளியானாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மீண்டும் புத்தம் புது தேவதையாய் விளம்பரத்தில் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யாராய். அவரது அழகின் ரகசியம்தான் என்ன? சரும அழகை பாதுகாக்க அவர் என்னதான் செய்கிறார் தெரிந்து கொள்ளுங்களேன்.
பாலும், யேகர்டும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அழகுசாதனப் பொருட்கள். இரண்டையும் கலந்து முகத்திற்கு மசாஜ் செய்வதோடு பேஸ் பேக் போட்டுக்கொள்வது ஐஸ்வர்யாவின் அழகின் ரகசியம்.
என்னதான் சினிமா சூட்டிங்கில் மேக்அப் போட்டாலும் சரும பாதுகாப்பிற்கு ஐஸ்வர்யா உபயோகிப்பது இயற்கை பொருட்களைத்தான் உபயோகிக்கிறாராம். கடலைமாவு பேஸ்பேக், அவரது பொன்னிறத்தை மேலும் அழகாக்குகிறது என்கிறார். ஒரு ஸ்பூன் கடலைமாவு, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீ ஸ்பூன் யோகட் அல்லது பால் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இந்த பேக் போட்டு பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாய் மின்னும் என்கிறார் ஐஸ்வர்யாராய்.
உடல் கட்டமைப்பை பேணிக்காக்க தேவையற்ற உணவுகளை உட்கொள்வதில்லை. தினசரி எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கிறார். வறுத்த, பொரித்த உணவுகளுக்கு எப்பொழுதுமே அனுமதியில்லை. மது, புகைப்பழக்கம் கிடையாது. இதுதான் அவரது கட்டான உடலமைப்பின் ரகசியம் என்கிறார்.
நீளமான அழகாக கூந்தல் ஐஸ்வர்யாராய்க்கு உண்டு. சூட்டிங் இல்லாத நேரங்களில் கூந்தல் பராமரிப்பில் தனி கவனம் செலுத்துவாராம். எப்பொழுதுமே தனக்கேற்ற உடைகளை அணிவதுதான் ஐஸ்வர்யாவின் கூடுதல் அழகு.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply