அன்னாசிப்பழ கோடியல்

Loading...

அன்னாசிப்பழ கோடியல்அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம்,
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள்
அடங்கியது. அன்னாசிப்பழத்தில் செய்த
கோடியலானது மேற்குறிப்பிட்ட சகலவகை
சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும்
காணப்படும். இந்தகோடியலின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
சுவையை அறிய இதனை செய்து குடிக்கவும்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகள்) – 500 கிராம்
சீனி – 600 கிராம்
தண்ணீர் – 650 மி.லி
சோடியம்பென்சொயிட் – ஒரு யோக்கற் கரண்டி(மட்டமாக)

செய்முறை
அன்னாசி துண்டுகளை கிரைண்டரில் போட்டு
அடித்து வடித்து கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சீனியுடன்
சோடியம் பென்சொயிட்டை கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மிகுதி சீனியுடன் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பொங்கிக்
கொதிக்கும் வரை காய்ச்சி இறக்கி 10 நிமிடத்திற்கு
ஆற வைத்து அதனுடன் அன்னாசிச்சாறு
சோடியம் பென்சொயிட் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அகன்ரியில் அல்லது மிகசிறியதுளையு
டைய வடிதட்டில் வடித்து எடுக்கவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90°c
யில் கொதிக்க வைத்து இறக்கி தொற்று நீக்கிய
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
போத்தலை மூடி சீல் வைக்கவும்.
பின்பு தேவையான நேரங்களில் இக்கலவையுடன்
தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தலாம்.
மாற்று முறை –
அன்னாசி பழத்திற்கு பதிலாக பசன் பழத்தை
பாவிக்கலாம்.
எச்சரிக்கை –
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி அருந்தவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் –
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90
பாகையில் கொதிக்க வைத்து இறக்கி துப்பரவான
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
ஆற விட்டு போத்தலை மூடி சீல் வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply