அடர்த்தி குறைவான கூந்தலா? கவலைபடாதீங்க

Loading...

அடர்த்தி குறைவான கூந்தலா  கவலைபடாதீங்கதற்போதைய காலத்தில் கூந்தலானது அளவுக்கு அதிகமாக வறட்சியோடு இருப்பதால், கூந்தலானது உதிர்ந்து நாளடைவில் அது அடர்த்தி இல்லாமல் காணப்படுகிறது. இதனால் நிறைய பேர் கவலைப்படுவதோடு, அந்த கவலையால் உடலும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு கவலை கொண்டால் மட்டும் கூந்தலானது வளருமா என்ன? ஆகவே அதற்கெல்லாம் வருத்தப்படாமல், கூந்தல் வளர்வதற்கான செயல்களை செய்தால் கூந்தல் கண்டிப்பாக நன்கு வளரும். அத்தகைய கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளர்வதற்கான சில எளிய வழிகளை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடர்த்தியான கூந்தலைப் பெற…
ஆயில் மசாஜ் : முதலில் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளர, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். அந்த ஆயில் மசாஜிற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆமணக்கெண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு 1/2 மணிநேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் ஆமணக்கெண்ணெய் அடர்த்தி குறைவாக உள்ள கூந்தலை, அடர்த்தியாக்க சிறந்த பொருள். மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் மெல்லியதாக இருக்கும் கூந்தலை கனமாகவும், ஆரோக்கியமாக வைக்கவும் சிறந்தது. ஆகவே இந்த ஆயில் மசாஜை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.
ஹேர் பேக் : இந்த நேரத்தில் சில கூந்தல் பராமரிப்பிற்கு தேவையான ஹேர் பேக்கை பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வளர்வதற்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, கூந்தலும் அடர்த்தியாக இருக்கும். அதுவும் இயற்கையாக தயாரிக்கும் ஹேர் பேக்-களை பயன்படுத்த வேண்டும். அதுவே கூந்தல் உதிராமல் கார்த்துக் கொள்ளும். இப்போது அந்த ஹேர் பேக்-கள் என்னவென்று பார்க்கலாமா!!!
* கனிந்த வாழைப்பழம் – வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு, கலந்து, கூந்தலுக்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். இதனால் கூந்லானது கனமாக இருப்பதோடு, பட்டுப் போல மின்னும்.
* வெண்ணெய் பழம் (avocado) : வெண்ணெய் பழத்தை நன்கு அரைத்துக் கொண்டு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆமணக்கெண்ணெயை விட்டு, நன்கு கலந்து, கூந்தலில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, குளிக்க வேண்டும். அதனால் கூந்தல் நன்கு பளபளப்போடு இருக்கும்.
* முட்டை : முட்டையில் அதிகமான அளவு புரோட்டீன் இருக்கிறது. பொதுவாக கூந்தல் அதிகம் உதிர்வதற்கு புரோட்டீன் குறைவால் தான். ஆகவே இரண்டு முட்டைகளை எடுத்து, அதில் இருக்கும் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு பௌலில் ஊற்றி, அதனை கூந்தலுக்கு தடவி, விரல்களால் 10-15 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு அதனை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கூந்தல் அடர்த்தியாக இருப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.
ஆகவே இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதோடு, கூந்தலும் அடர்த்தியாக காணப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply