ஃபேஸ்புக் மூலமா பணம் அனுப்பலாம் .!!! தெரியுமோ??

Loading...

ஃபேஸ்புக் மூலமா பணம் அனுப்பலாம் .!!! தெரியுமோணி ஆர்டரில் ஆரம்பித்து ஈ-கேஷ் வரை வந்துள்ள பண பரிமாற்று முறையை தற்போது ஃபேஸ்புக்கிலும் பயன்படுத்தமுடியும். இன்டெர்நெட்டில் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அப்ளிகேஷன் என்றால் அது நிச்சயம் ஃபேஸ்புக் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்ல. பல மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது ஃபேஸ்புக் இணையதளம். இதில் ஏதேனும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் தற்போது பணம் பரிமாற்றம் செய்யும் ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப், முதல் முதலாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஃபேஸ்புக்கில் காணப்படும் மெசெஜ்சரிலேயே, இந்த தெரிவு காணப்படவுள்ளது. ஃபேஸ்புக் மெசெஜ்சர் சேவையில் ஸ்டிக்கர் அனுப்பும் பட்டனுக்கு அருகில் $ என்ற பட்டன் அறிமுகப்படுத்தப்படும். இந்த பட்டனை அழுத்தி, வாடிக்கையாளரது டெபிட் கார்ட் அட்டை இலக்கத்தை பதிவு செய்து அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் வாடிக்கையாளர்கள் அதில் குறிப்பிடும் பணத்தொகை விரைவில் உரிய நபருக்கு பரிமாற்றம் செய்யப்படும். சிலவேளைகளில் வாடிக்கையாளர்களின் கணக்கைப்பொருத்து இதற்கு சற்று காலம் எடுக்கக்கூடும். வாடிக்கையாளர்களின் கணக்கையும் அடையாள எண்ணையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அதற்கென அங்கிகரிக்கப்பட்ட பாதுகாப்புகளையும் அதில் மேற்கொள்ள முடியும். மேலும் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க முகப்புத்த நிறுவனம் எதிர்ப்பு மோசடி நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது. தரம் வாய்ந்த சேவையாக இருக்கும் இந்த சேவையை ஆப்பிள், ஆன்ட்ராய்ட், கணினி என்று அனைத்திலும் உபயோகப்படுத்தலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply