ஃபேஸ்புக் இவ்வளவு பெரியதாகவும் மாறும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை; மார்க் ஜுகெர்பர்க்

Loading...

ஃபேஸ்புக் இவ்வளவு பெரியதாகவும் மாறும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை  மார்க் ஜுகெர்பர்க்உலகம் முழுவதும் 120 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஃபேஸ்புக் இணையதளம் அதனையொத்த பிற போட்டி இணைய தளங்களுக்கிடையே தன்னுடைய இளம் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கடுமையான சூழ்நிலையில் பத்தாவது பிறந்தநாளைக் நேற்று கொண்டாடியது. இந்நிறுவனம் தனது பத்தாவது பிறந்தநாளைக் உலகம் முழுவதிலலும் உள்ள தனது நிறுவனங்களில் வெகு விமர்சியாக கொண்டாடியது. இந்நாளையொட்டி பேஸ்புக் இணையதளம் ஒரு பிரத்தியேக விடியோவை வெளியிட்டுள்ளது. நேற்றைய கொண்டாட்டங்களுடன் நியூயார்க் பங்கு சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 2.7 சதவீதம் உயர்ந்து இதனால் இந்நிறுவனத்தின் பங்கு விலை 62.75 டாலராக உயர்ந்தது.
mark zuckerbergஅந்நிறுவனத் தகவல்களின் படி இந்த சமூக இணையதத்தை உலக மக்களின் ஒரு பெரும் பகுதியினர், அதாவது சுமார் 120 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் உபயோகிக்கின்றனர்.
முப்பதே வயதாகும் ஜுகெர்பர்க் சிலிகான் வாலி மாநாட்டில் இந்த 10 ஆண்டு நிறைவையொட்டி பேசுகையில், தான் தன்னை உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவராக மாற்றிய இந்த தளத்தை துவங்குகையில் இந்த இணைய தளம் இவ்வளவு பெரியதாகவும் செல்வாக்குடையாதாகவும் மாறும் என எதிர்ப்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
“இதை செய்யக்கூடியவர்கள் நாங்களாக இருப்போம் என எப்போதும் தோன்றியதில்லை” என அவர் தெரிவித்தார். அது முதல், ஃபேஸ்புக் மற்றும் அதன் வர்த்தகங்கள், ஒரு பொது நிறுவனமாக உருமாற்றம் பெற்று பல்வேறு மாற்றங்களுக்குள்ளானது என அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மொபைல் வாடிக்கையாளர் சந்தையில் செயலாற்ற சற்று தாமதமானாலும், தங்களுடைய விளம்பர வருமானத்தில் பாதிக்கும் மேல் மொபைல் உபயோகிப்பாளர்கள் மூலம் கிடைப்பதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply