7 ஸ்டார் கேக்

Loading...

7 ஸ்டார் கேக்பால் – அரை லிட்டர்
சர்க்கரை – ஒன்றரை கப்
கடலைமாவு – ஒரு கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
ரவை – ஒரு கப்
மைதாமாவு – அரை கப்
காரட் துருவல் – ஒரு கப்
ஏலம் – 3
பேரிச்சைபழம் – ஒரு கப்
நெய் – 300 கிராம்
முந்திரிபருப்பு – கொஞ்சம்
செர்ரி பழம் – அலங்கரிக்க

முதலில் காரட்டை பாலில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தையும் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா தயாரிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சவும்.
கம்பி பதம் வரும் போது மைதா, ரவை, கடலைமாவு போட்டு கிளறவும்.
பிறகு நெய் ஊற்றி கிளறவும். கோவா சேர்த்து கிளறி ஏலப்பொடி தூவவும்.
கேக் பதத்தில் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாலத்தில் கொட்டி அதில் முந்திரி பருப்பு ஒரு செர்ரி போட்டு அலங்கரிக்கவும்.
ஆறியவுடன் கேக் துண்டுகள் போட்டு உடனே சாப்பிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply