ர‌ச‌ ம‌லாய்

Loading...

ர‌ச‌ ம‌லாய்கொதிக்க வைக்க:
பால் – ஒரு லிட்டர்
ஏலக்காய் – இரண்டு
குங்குமப்பூ – ஒரு தேக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி – த‌லா ஐந்து
சர்க்கரை – 150 கிராம்
மாவாக கலக்கி கொள்ள:
பால் பவுடர் – ஒரு ஆழாக்கு (200 கிராம்)
முட்டை – ஒன்று
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரன்டி
நெய் – ஒரு தேக்கரன்டி (உருக்கியது)

பிஸ்தா, பாதாம், முந்திரியை வெந்நீரில் போட்டு பொடியாக‌ நீள‌வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

பால் நன்கு கொதித்து சுண்டி வந்ததும் தீயை குறைத்து வைக்கவும்.

பால் பவுடருடன் முட்டை, பேக்கிங் பவுடர், நெய் ஆகியவற்றை சேர்த்து ஃபோர்க்கால் நன்கு கிளறி விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு கொட்டை பாக்கு அளவு உருண்டைகளாக உருட்டி வேண்டிய வடிவத்தில் செய்துக் கொள்ளாவும்.

கொதித்து கொண்டிருக்கும் பாலில் சஃப்ரானை தூவி செய்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

உருண்டைகளை சேர்த்ததும் கரண்டியை வைத்து கிளறி விடாமல் சட்டியை இருபுறமும் துணியை பிடித்து தூக்கி ஒரு முறை சுழற்றி விட்டு வைக்கவும்.

பாலுடன் சேர்ந்து நன்கு ஆற வைத்து பின்னர் ப்ரிட்ஜில் வைத்திருந்து குளிர்ந்ததும் எடுத்து கப்பில் ஊற்றி நட்ஸ் வகைகளை மேலே தூவி பரிமாறவும். சுவையான கோடைக்கேற்ற குளிர்ச்சியான ரசமலாய் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN