தீபாவளி அன்று வண்ணமயமாக ஜொலித்த தென் இந்தியா: புகைப்படம் வெளியானது

Loading...

தீபாவளி அன்று வண்ணமயமாக ஜொலித்த தென் இந்தியா  புகைப்படம் வெளியானதுசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி வீரர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தென் இந்தியா தொடர்பாக புகைப்படம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 233-வது நாளை கடந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த அவர், அங்கிருந்து விதவிதமாக பூமியை படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தீபாவளியன்று பட்டாசுகளாலும் வாணவெடிகளாலும் ஜொலிக்கும் தென் இந்தியா தொடர்பாக புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

16ம் திகதி காலை 5.26 மணிக்கு ஸ்காட் கெல்லி தனது ட்விட்டரில் இந்த புகைப்படத்தை பதிவிட்டார்.

தற்போது 10 ஆயிரம் லைக்குகளை கடந்து இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

Loading...
Rates : 0
VTST BN