ஸ்டஃப்டு சப்பாத்தி

Loading...

ஸ்டஃப்டு சப்பாத்திகோதுமை மாவு – 2 கப்
உருளை கிழங்கு – 3
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – 2 கொத்து
பெரிய வெங்காயம் – 2
கரம் மசாலா – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
குடைமிளகாய் – பாதி
எண்ணெய் – கால் கப்

உருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்து, தோலுரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி (வெந்நீர் வேண்டாம்), சிறிது எண்ணெய்யும் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை 30 நொடி வதக்கவும்.

பிறகு வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் கரம் மசாலா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் போட்டு 3 நிமிடம் கிளறி விடவும். மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

ஊறிய மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி சற்று தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். பின்னர் அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு மசாலாவை வைக்கவும்.

சப்பாத்தியை மடித்து மசாலா வெளியே வராதவாறு மூடவும்.

மாவின் தடிமன் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் தேய்க்கும்போது மசாலா வெளியே வராது.

இப்போது மசாலா வைத்து மூடியுள்ள மாவினை மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். இம்முறை மிகவும் எச்சரிக்கையாக மிருதுவாக தேய்க்க வேண்டும். இல்லையெனில் மசாலா வெளிவந்து மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்துவிடும்.

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

திருப்பிப் போட்டு, தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய்யை ஓரங்களில் இட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். சாஸ் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply