ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல்

Loading...

ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல்கோதுமை மாவு – ஒன்றரை கப்
மிளகாய் வற்றல் – 4
உருளைக்கிழங்கு – 4
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
தனியா – அரை தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 15
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, மசித்து எடுத்துக் கொள்ளவும்.

பட்டை, சோம்பு, புளி, மிளகாய் வற்றல், உப்பு, சீரகம், தனியா, மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தும், அதில் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறவும்.

எல்லாம் ஒன்றாக சேரும்படி 4 நிமிடம் கிளறவும். நன்றாக மசாலாப் போல் வந்ததும் இறக்கிவிடவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவில், எலுமிச்சை அளவு மாவை எடுத்து மெல்லியதாக சப்பாத்தி போல் தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியின் மேல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி பரவலாக தேய்த்து விடவும்.

பின்னர் அதன் மேலே சிறிது கோதுமை மாவைத் தூவி விடவும். அதனை இப்போது இரண்டாக மடிக்கவும்.

இரண்டாக மடக்கிய சப்பாத்தியின் ஒரு புறத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பரப்பி, அதன் மீது சிறிது கோதுமை மாவினைத் தூவி, மீண்டும் இரண்டாக மடக்கவும்(சமோஸா போல).

அதை சப்பாத்தியாக முக்கோண வடிவிலேயே பெரிதாக தீட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும், சப்பாத்தியை போட்டு, மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

பிறகு செய்து வைத்த மசாலாவை வெந்த சப்பாத்தியின் ஒரு ஓரத்தில் வைத்து, மசாலா உட்புறம் இருக்குமாறு அப்படியே உருட்டவும்.

இப்படியே அனைத்து சப்பாத்திகளையும் செய்து, மசாலாவை வைத்து ரோல் செய்யவும். சாதாரண சப்பாத்தியை விரும்பாத குழந்தைகள்கூட இதனை விரும்பிச் சாப்பிடுவர். இதனை அப்படியே சாப்பிடலாம். சாஸ், குருமா போன்றவற்றை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply