ஷவரில் தலைக்கு குளிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்!!!

Loading...

ஷவரில் தலைக்கு குளிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்!!!ஷாம்புவை சரியாக போடவும்

பெரும்பாலான மக்கள் முடி எவ்வளவு நீளம் உள்ளதோ, அந்த அளவிற்கு ஷாம்புவை தடவி தேய்த்து குளிப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி, அழுக்கானது ஸ்கால்ப், மயிர்கால்கள் போன்றவற்றில் தான் இருக்கும். ஆகவே அந்த இடங்களில் மட்டும் ஷாம்பு போட்டு நன்கு தேய்த்து குளித்தால் போதும்.

அதைவிட்டு, முடியின் முனை வரை ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தால், முடியின் முனைகளில் வறட்சி அதிகம் ஏற்படும். இதனால் முடி வெடிப்பு ஏற்படும்.

சுடுநீரை தவிர்க்கவும்

எப்போதுமே சுடுநீரை சருமத்திற்கோ, கூந்தலுக்கோ பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சுடுநீர் சருமம் மற்றும் முடியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களை முற்றிலும் நீக்கி, முடியை வறட்சி அடையச் செய்து, அதிக சிக்கு ஏற்பட வழிவகுக்கும்.

எனவே வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

சரியாக சீவவும்

பெரும்பாலான பெண்களுக்கு எப்படி தலை சீவுவது என்று தெரியவில்லை. நிறைய பெண்கள் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று ஈரமான தலையில் சீப்பை வைத்து சீவுகின்றனர்.

ஆனால் அப்படி சீவுவதால் முடி வெடிப்பு ஏற்படுவதோடு, முடி உதிர்தலும் ஏற்படும். மேலும் முடி நன்கு உலராமல் தலையில் சீப்பு வைக்க கூடாது. முதலில் முடியின் முனைகளில் உள்ள சிக்கை நீக்கிவிட்டு, பின் தலையில் இருந்து சீவ வேண்டும்.

அடிக்கடி ஷாம்பு வேண்டாம்

தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று தினமும் ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் நீங்கி, முடி வறட்சி அடைந்து, அதன் ஆரோக்கியம் போய்விடும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply