வெள்ளரிக்காய் தோசை

Loading...

வெள்ளரிக்காய் தோசைதேவையான பொருட்கள் :

பச்சரிசி – 250 கிராம் (3 மணிநேரம் தண்ணீரில் ஊறவையுங்கள்)
வெள்ளரிக்காய் – 250 கிராம்
தேங்காய் துருவல்–2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
சீரகம்–1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை–1 கைப்பிடி
உப்பு–தேவைக்கு
நல்லெண்ணெய்–தேவைக்கு

செய்முறை:

• வெள்ளரிக்காயை தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.

• தேங்காய் துருவல், மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.

• வெள்ளரிக்காயை, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து அரையுங்கள். தேவைக்கு சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

• அரைத்த மாவை, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொருட்களுடன் சேர்த்து, கலந்து தேவைக்கு உப்பும் கலந்து தோசையாக வார்த்தெடுங்கள்.

• இந்த மாவை அரைத்தவுடன் தோசையாக்கி விடலாம். புளிக்கவைக்க வேண்டியதில்லை. சுவையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply