வெந்தயத் துவையல்

Loading...

வெந்தயத் துவையல்தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 25 கிராம்,
வெந்தயம் – 1 தேக்கரண்டி,
வர மிளகாய் – 7,
தகுந்த அளவு உப்பு, புளி, வெல்லம்,
தாளிக்க நல்லெண்ணை, கடுகு.

செய்முறை :

• வாணலியை நன்கு சூடு செய்த பிறகு வெந்தயத்தைப் போட வேண்டும். போட்ட உடனே சிவக்கும், வெடிக்க ஆரம்பிக்கும். நன்கு சிவக்க வறுபட்டதும் எடுத்து தட்டில் கொட்ட வேண்டும்.

• மிளகாய், துவரம் பருப்பு இரண்டையும் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறி விடவும்.

• ஆறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உப்பு, நனைய வைத்த புளி, வெல்லம் சேர்த்து துவையல் அரைத்தால் ருசியாகவும் இருக்கும்.

• கடைசியாக கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் கொட்டினால் சுவையான சத்தான வெந்தயத் துவையல் ரெடி.

• இந்த துவையல் நன்கு ஜீரணமாகும். வாந்தி, பேதியை கட்டுப்படுத்தும். வெந்தயத்தை உட்கொள்ளும்போது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். சளி, இருமல் அடிக்கடி வராமல் தடுக்கும். இதில் உள்ள ஈஸ்ட்ரோஜன் போன்ற ஒன்று மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல விதமான பிரச்சினைகளைத் தடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply