வெண்டைக்காய் பொரியல்

Loading...

வெண்டைக்காய் பொரியல்வெண்டைக்காய் – 12
வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 1/4 கப்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை மெல்லிய வட்டவடிவில் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன்பே கழுவிவிடவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை போட்டு 3 நிமிடம் வதக்கி எடுத்து தனியே வைத்து விடவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு அரை நிமிடம் வதக்கி விட்டு, நறுக்கின தக்காளித் துண்டங்களைப் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டங்களைப் போட்டு அதனுடன் மிளகாய் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிரட்டி விடவும்.

அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு ஒருமுறை பிரட்டி விட்டு, வாணலியை மூடி விடவும்.

சுமார் 2 நிமிடங்கள் கழித்து திறந்து தேங்காய் துருவல் தூவி கிளறி விடவும். இப்போது நீர் எல்லாம் சுண்டியிருக்கும்.

வெண்டைக்காயுடன் மசாலா நன்கு சேர்ந்து வேகும் வரை கிளறிவிட்டு, 5 நிமிடங்கள் சுருள வதக்கவும்.

மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து, காய்கள் நன்கு வெந்தபிறகு இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply