வெண்டைக்காய் அவியல்

வெண்டைக்காய் அவியல்தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 15
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் – 2 பத்தை
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

• வெண்டைக்காயை துண்டுளாக நறுக்கி கொள்ளவும்.

• முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

• வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

• பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்பு புளிச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு 15 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும்.

• பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், வெண்டைக்காய் அவியல் ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN