வெஜிடபிள் சமோசா

Loading...

வெஜிடபிள் சமோசாமைதா மாவு – ஒன்றரை கோப்பை
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
உருகைக்கிழங்கு – அரைக் கிலோ
பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி
கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி
புதினா தூள் – அரைதேக்கரண்டி
அல்லது புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு கோப்பை

இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.

அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.

பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.

பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.

இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.

அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில் செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply