வீட்டிலேயே காணப்படும் மிகச்சிறந்த மேக்கப் நீக்கும் பொருட்கள்!!!

Loading...

வீட்டிலேயே காணப்படும் மிகச்சிறந்த மேக்கப் நீக்கும் பொருட்கள்!!!ஒளி பொருந்தியவாறும், பார்வைக்கு பளிச்சிடும் வகையிலும இருக்கும் சருமத்தை பெற வேண்டுமானால், அதை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு சருமத்தை பாதுகாக்கும் பொருட்களை கவனத்தில் வைத்திருப்பதும், பராமரிப்பதும் இன்றியமையாத விஷயமாகும்.

பாதாம் பால்

பாதாம் கொட்டையிலிருந்து பாதாம் பால் தயார் செய்யப்படுகிறது. பிற பால் வகையறாக்களைப் போல், பாதாம் பாலில் லாக்டோஸ் இருப்பதில்லை. உரிக்கப்பட்ட பாதாம் கொட்டைகளை எடுத்து, நன்றாக வெளிரும் வகையிலும், கிரீம் போலவும் அரைத்துக் கொள்ளவும்.

நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கவும் மற்றும் இயற்கையாகவே சுத்தம் செய்யும் கரைசலாகவும் பாதாம் பால் உள்ளது.

இவ்வாறு மேக்கப்பை நீக்கும் போது, சிறிதளவு பாதாம் பாலை எடுத்து ஒரு பருத்தி துணியை உருண்டையாக சுற்றி அதில் நனைத்து, முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும்.

இவ்வாறு தேய்த்து விட்டு முகத்தை நன்றாக கழுவவும். அதிகபட்சமாக இருக்கும் பாதாம் பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்கும் குணம், உங்கள் முகம் வறண்டு போகாமலும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கச் செய்ய உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் வெள்ளரிக்காய் உதவுவதால், செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்களை தேடிச் செல்வதை தவிர்க்கலாம்.

நீங்கள் வெள்ளரிக்காய் சாற்றைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவலாம் மற்றும் வெள்ளரிக்காயை எடுத்து நன்றாக அரைத்து அந்த கலவையை முகத்தில் பசை போல தேய்த்து ஒட்டிக் கொள்ளவும் செய்யலாம்.

சோயா பால் மற்றும் வாழை

சோயா பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் கலவை மேக்கப் சாதனங்களை நீக்க மிகவும் இயற்கையான வழிமுறையாக உள்ளது. இந்த கலவையில் உள்ள என்சைம்கள் மேக்கப்பை கரைக்கவும் மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கை நீக்கவும் உதவுகின்றன.

இந்த கலவையை உருவாக்கும் போது, வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி, சோயா பாலுடன் கலந்து கொள்ளவும். இந்த இரண்டும் ஒன்றாக நன்றாக கலக்கும் வகையில் கலந்து விட்டு, முகம் முழுவதும் தடவி விடுங்கள். இந்த கலவையை சில நிமிடங்கள் முகத்தில் தடவி விட்டு, நன்றாக கழுவுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply