விண்டோஸ் 7 விரைவில்

Loading...

விண்டோஸ் 7 விரைவில்மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடும் முன் அது குறித்த தகவல்களைக் கசிய வைத்திடும். அல்லது வெளியிடும் முன் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்திடும். விண்டோஸ் 7 என்பது குறித்த சில தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கேட்காதவர்களுக்கு இதோ சில தகவல்கள். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான இன்றைய பெயர் விண்டோஸ் – 7. ஆம், விண்டோஸ் விஸ்டாவிற்கு அடுத்த சிஸ்டமாக விண்டோஸ் 7 வர இருக்கிறது.
முதலில் இதற்கு வியன்னா என்றும் பிளாக் கோம் என்றும் பெயர்கள் இடப்பட்டன. இது வரும் 2010 ஆம் ஆண்டில் தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த தொகுப்பு வரும் 2009 ஆம் ஆண்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திட மிருந்து அதிகாரப் பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் இந்த தொகுப்பின் 32 பிட் மற்றும் 64 பிட் என இருவகை கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த பதிப்பில் மற்றவற்றுடன் பகிர்ந்து பயன் படுத் தக்கூடிய சில வசதி கள் தரப்படலாம். இதில் பேக் அப் வசதிகளும் புதிய வகையிலான கண்ட் ரோல் பேனல் அம்சங்களும் கிடைக்க இருக்கின்றன. விண்டோஸ் எக்ஸ் புளோரர் தொகுப்பு 8 இத்துடன் கிடைக் கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply