வாழைப்பழம் சாப்பிட மட்டுமில்லை முகத்துக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா?

Loading...

வாழைப்பழம் சாப்பிட மட்டுமில்லை முகத்துக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா* சருமம் பொலிவிழந்த காணப்பட்டால், மசித்த வாழைப்பழத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

* மசித்த வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

* வாழைப்பழத்தை மசித்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் ஸ்கரப் செய்து, முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களால் சருமத்தில் ஏற்பட்ட சொரசொரப்பு நீங்கி, சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.

* மசித்த வாழைப்பழத்துடன், சிறிது அவகேடோவை மசித்து சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply