வாய் நாறுதா… பல் நிறம் மாறுதா… | Tamil Serial Today Org

வாய் நாறுதா… பல் நிறம் மாறுதா…

Loading...

வாய் நாறுதா… பல் நிறம் மாறுதா…டாக்டர் , எனக்கு வயிறு வலிக் கிறது’ என்று நோயாளி சொன்னால், ‘வாயை நன்றாக திறங்க’ என்பார். வயிற்றில் வலி என்றால் வாயை காட்டுன்னு சொல்றாரே என்று கடுப்பாக சிலர் முணுமுணுப்பர்.

இப்படி சம்பந்தம் இல்லாமல் டாக்டர்கள் பரிசோதிப்பது , பார்ப் பதற்கு வேண்டுமானால் அர்த்தமில்லாமல் இருப்பதாக தோன்றும். ஆனால், டாக்டருக்கு தான் தெரியும், எதனால், இந்த கோளாறு வந்துள்ளது என்று. முன்பெல்லாம், பல் வலிக்கிறது… ஆடுகிறது, ஈறுகளில் வலி என்றால், பல் டாக்டர், அதற்கு மட்டும் சிகிச்சை செய்வார். ஆனால், இப்போது பல நோய் களை காட்டிக்கொடுக்கும் அறிகுறிகளை வாயில் காண முடியும்.

ஆம், அமெரிக்க பல் மருத்துவ நிபுணர் ஜோசப் கிராபிட்ஸ், முதன் முதலில் 2003ல், இதுபற்றி பரபரப்பான தகவல்களை வெளியிட்டதும், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் ரிச்சர்ட் கார்மோனா மற்றும் பல் வேறு மருத்துவ நிபுணர்கள் இதுபற்றி தீவிரமாக ஆராய்ச்சிகளை செய்தனர்.

வாயை பார்த்தாலே: அமெரிக்கா உட்பட பல நாடுகளில், பல்வேறு நோய்களை கண்டறிய வாயை முக்கிய அறிகுறியாக டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். வாயை சோதித்த பின் தான், மற்ற சோதனைகளை செய்ய சொல்கின்றனர்.

வாயை சோதித்தால், மூன்று வகையில் அறிகுறி தெளிவாக தெரிந்து விடும். ஒன்று, வாய் நாற்றமெடுப்பது; இரண்டாவது, பற்களின் சாயம் மாறுவது; மூன்றாவது, ஈறுகளில் பாதிப்பு. இந்த மூன்று அறிகுறிகளில் ஒன்று காட்டிக்கொடுத்தாலும், உடனே டாக்டர் உஷாராகி விடுவார்.

அறிகுறிகள் மூன்று: அறிகுறி காட்டிக்கொடுத்த பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளை செய்ய சொல்வார். ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தால், அந்த பரிசோதனை செய்து உறுதி செய்வார். அதுபோல, சர்க்கரை நோய் முதல், பெண்களுக்கு கருத்தரிப்பு வரை கூட வாய் மூலம் அறிகுறிகள் தெரியும். சில நோய்களை, வாய்வழி நாற்றத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம்; சில நோய்களுக்கு ஈறுகளில் உள்ள சிறிய புள்ளிகள், வீக்கம் அறிகுறிகளாக பயன்படுகின்றன. அமெரிக்க நிபுணர் கிராபிட்ஸ், இது தொடர்பாக ஆயிரக்கணக்கான நோயாளிகளை பரிசோதித்து இதை வகைப்படுத்தியுள்ளார்.

* இதய பாதிப்பு: இதய பாதிப்புக்கு முக்கிய காரணம் ரத்த அழுத்தம் தான். பற்களை தாங்கியுள்ள ஈறுகளில் கருஞ்சிவப்பு நிறம் ஏறியிருந்தால் உஷாரடைந்து விட வேண்டும். சிலருக்கு சிவப்பும், நீலமும் சேர்ந்த நிறமாக சாயம் இருக்கும். உடனே, அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். அப்படி செய்தால், ரத்த அழுத்தம் தெரிந்துவிடும்.

* டைப் 2 டயபடீஸ்: பற்களை பாதுகாக்கும் ஈறுகளில் அழுக்கு படிந்து, தடிமனாக படிமம் ஆகி, கடைசியில் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். இப்படி எந்த பாதிப்பும் இல்லாமல்,ஈறுகளை தொட்டால், உடனே ரத்தக்கசிவு ஏற்பட்டால், உஷாராகி விட வேண்டும். ஆம், அது தான் , டைப் 2 சர்க்கரை நோய் வந்துள்ளதற்கான அறிகுறி.

* சிறுநீரக பாதிப்பு: வாய் வழி மூச்சு விட்டால், இனிப்பான அம்மோனியா வாயு வெளிவரும். இதை டாக்டரால் தான் உணர முடியும். இப்படி இருந்தால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு சிறுநீரக கோளாறு உள்ளதாக கண்டுகொள்ளலாம். சிறுநீரக சோதனையை உடனே செய்ய வேண்டும். அலட்சியப்படுத்தக்கூடாது; தாமதிக்கவும் கூடாது.

* ஆசிட் பாதிப்பு: பற்களை தாங்கியிருக்கும் சதைப்பற்று பகுதியில் ஒரு வித ஆசிட் பரவி இருக்கும். அது தான் பற்களை தாங்கியிருக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு வந்தால், ஆசிட் குறைபாட்டால் தான் ஏற்படும். அதையும் பற்கள் காட்டிக்கொடுத்து விடும்.

* வாய் வழி புற்றுநோய்: பற்களின் ஈறுகளின் ஊடே உள்ள சதைப்பற்றில், வெள்ளை புள்ளி இருந்தால், இதில் உடல் கோளாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த வெள்ளைப்புள்ளியை டாக்டர் கண்டுபிடித்து விடுவார்.

* ரத்தப்புற்றுநோய்: வீக்கம் அடைந்து சிவப்பு நிறமேறிய ஈறுகளில் வலி இருக்கும். ரத்தக்கசிவும் ஏற்படும். சர்க்கரை நோய்க்கான அறிகுறியை விட, இது வித்தியாசமாக இருக்கும். அப்படி இரண்டு வாரம் நீடித்தால் இந்த கோளாறு தான் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

* எலும்பு நோய்: எலும்புகளை பாதித்து பலவீனப்படுத்தும் நோய்க்கு பற்களில் கரும்புள்ளிகள் தான். பற்களில் எக்ஸ்ரே எடுத்தால் இதை கண்டுபிடித்து விடலாம்.

* மன அழுத்தம்: மன அழுத் தத்தை கூட வாய் வழியாக கண்டுபிடித்து விட முடியும். எப்படி தெரியுமா? பற்கள், ஈறுகளில் கீறல், சேதம் என்று பலவீனம் இருந்தால் மனது சரியில்லை என்று பொருள்.

* தூக்கமின்மை: தூக்கமில்லாமல் அடிக்கடி கொட்டாவி விடுவது, குறட்டை விடுவது போன்றவை காரணமாக, நாக்கு சற்று வீக்கம் கண்டது போல இருக்கும்; அதுபோல, ஈறுகளிலும் பலவீனம் தெரியும்.

* கருத்தரிப்பு: கருத்தரிப்பு ஏற்படப்போகிறது என்றால், பெண்களின் சுரப்பிகளில் மாற்றம் இருக் கும். அதை ஆழமாக வீங்கி இருக் கும் ஈறுகள் காட்டிக்கொடுத்து விடும்.

இந்த அறிகுறிகளை கண்டுபிடிக்க, அனுபவம் வாய்ந்த பல் டாக்டர், பத்து நொடிகள் பரிசோதித்தாலே போதும்.

Loading...
Rates : 0
VTST BN