வாயில் துர்நாற்றமா?

Loading...

வாயில் துர்நாற்றமாவாய் துர்நாற்றம் என்பது பேசுபவர்களுக்கு தெரியாது. எதிரில் இருப்பவர் மூக்கை மூடும்போது தான் பேசுபவருக்கு தெரியவரும். வாய் துர்நாற்றத்திற்கு, சரியாக பல் விலக்காதது.

சொத்தை பற்கள், புகை பிடித்தல், குடிப்பது, புகையிலை பொருட்கள் மெல்லுவது, வெற்றிலை பாக்கு, பான்பராக் பழக்கங்கள், இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருப்பது, வாய் உலர்ந்து போவது, காலையில் பல் துலக்காமல் டீ, காபி குடிப்பது, பல்செட்டை முறையாக பராமரிக்காதது. சில நோய்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

* வாய் துர்நாற்றத்தை தடுக்க, காலை, மாலை 2 வேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். ஆயில் புல்லிங் செய்யலாம்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இரவில் நீண்ட நேரம் விழிக்கக்கூடாது.

* பற்கள் அல்லது முழுவதும் பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயை கொப்பளிக்க வேண்டும்.

* வாய் உலர்ந்தவர்கள் அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள கிருமிகளை அகற்றலாம். இரவு நேரங்களில் அதிகமாக பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சொத்தை பற்கள் இருந்தால் உடனடியாக அடைத்து கொள்ள வேண்டும்.

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply