லட்டு

Loading...

லட்டுகடலை மாவு – ஒரு கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
சீனி – ஒரு கப்
தண்ணீர் – முக்கால் கப்
ஏலக்காய்த் தூள் – சிறிது
முந்திரி – 8
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க

சீனியுடன் ஏலக்காய்த் தூள் சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, கம்பி பதமாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்து, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைக்கவும்.

பிறகு கடலை மாவில் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

பூந்தி கரண்டியில் சிறிது மாவை ஊற்றி பூந்திகளாக விழுகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்திகளாக பொரிக்கவும்.

இதே போல் மாவு முழுவதையும் பூந்திகளாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பொரித்த பூந்தியை சீனி பாகில் போட்டு, நன்றாகக் கிளறி அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் முந்திரி சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.

சுவையான லட்டு தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply