ராகி கொழுக்கட்டை

Loading...

ராகி கொழுக்கட்டைதேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கையளவு
துருவிய தேங்காய் – 1/4 கப் பொடித்த
வெல்லம் அல்லது கருப்பட்டி – 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:

• முதலில் பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, தனியாக பருப்பை வைத்துக் கொள்ளவும்.

• பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கேழ்வரகு மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் வெல்லம் அல்லது கருப்பட்டியை போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

• ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி.

• நீரழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு. • பாசிப்பருப்பு போட விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply