ரஸ்க் லட்டு | Tamil Serial Today Org

ரஸ்க் லட்டு

Loading...

ரஸ்க் லட்டுதேவையான பொருட்கள்:

ரஸ்க் (rusk)– 10
வெல்லம் – ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் – 4
முந்திரி – 4
நெய் – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்

செய்முறை :

• ரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும்.

• ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வெல்லம், தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

• வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை கலந்து வைத்திருக்கும் தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

• ரஸ்கின் உடைத்த நடுப்பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் பொடி செய்த ரஸ்கை போட்டு அதனுடன் தேங்காய் கலவையை போட்டு பிசையவும்.

• பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

• சுவையான எளிமையாக செய்யக்கூடிய ரஸ்க் உருண்டை தயார்.

Loading...
Rates : 0
VTST BN
ads