மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்

Loading...

மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்சுவீட் ப்ரெட் – 4 (சிறியது)
பால் – 200 மில்லி
முட்டை – ஒன்று
சீனி – 1 – 2 மேசைக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி

புட்டிங் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனி சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

அடித்து வைத்திருக்கும் பால் கலவையுடன் ப்ரெட்டை உதிரித்து போட்டு கலந்துக் கொள்ளவும்.

எல்லாம் சேர்ந்து ஒன்றாகும்படி கலந்து, மைக்ரோஓவன் ப்ரூஃப் பவுலில் நெய் தடவி கலவையை ஊற்றி வைக்கவும்.

பவுலில் ஊற்றி தயாராக வைத்திருக்கும் கலவையை அவனில் 6 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பின்னர் எடுத்து 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். எடுக்கும் பொழுது கவனமாக எடுக்கவும்.

அந்த பவுலை ஒரு தட்டில் தலை கீழாக சாய்க்கவும். பார்க்க அழகான வடிவத்தில் சுவையான ப்ரெட் புட்டிங் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply