மைக்ரோவேவ் பாண் பழப் புடிங்

Loading...

மைக்ரோவேவ் பாண் பழப் புடிங்பாண் – 4 துண்டுகள்.
பால் – ஒரு கப் (250 மி.லி)
முட்டை – 2
ஆப்பிள் – ஒன்று
வாழைப்பழம் – ஒன்று
பேரீச்சம்பழம் – 8
பதப்படுத்திய ஆரஞ்சுத்தோல் – 50 கிராம்
கறுப்புச்சீனி – 4 தேக்கரண்டி
மாஜரீன் – ஒரு மேசைக்கரண்டி
கறுவாத்தூள் – 1/2 தேக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாணை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பழங்களை தோலை நீக்கி விட்டு நறுக்கி வைக்கவும். ஆரஞ்சுத்தோலையும் நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். அதில் மாஜரீனை இளக்கி சேர்த்து அடிக்கவும்.

உதிர்த்து வைத்துள்ள பாணுடன் சீனி, நறுக்கின பழங்கள், கறுவாத்தூள் மற்றும் அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி கலக்கவும்.

அவனில் வைக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஹையில் வைத்து 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து நறுக்கின பேரீச்சையை மேலே வைத்து அலங்கரிக்கவும்.f

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply