மைக்ரோவேவ் அவன் கலாகண்ட்

Loading...

மைக்ரோவேவ் அவன் கலாகண்ட்பால் பவுடர் – ஒரு கப்
ரிக்கோட்டா சீஸ் – ஒரு டப்பா
நெய் – ஒரு தேக்கரண்டி
சீனி – ஒரு கப்
பாதாம் – ஒரு தேக்கரண்டி
பிஸ்தா – ஒரு தேக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சீனி, சீஸ் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

தவாவில் நெய் ஊற்றி பாதாம் மற்றும் பிஸ்தாவை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்திருக்கும் பால் பவுடர், சீனி, சீஸ் கலவையை அவன் ட்ரேயில் கொட்டி பரப்பி விடவும்.

அதன் மீது வறுத்த பாதாம், பிஸ்தாவை தூவி விட்டு அவனில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

25 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து வில்லைகளாக்கி பரிமாறவும். சுவையான, மிக எளிதில் செய்யக்கூடிய மைக்ரோவேவ் அவன் கலாகண்ட் ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply