மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

Loading...

மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படிசிறப்பான நிறங்கள்

நாகரீகத்தின் அடிப்படையில் போக வேண்டுமானால் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை அல்லது இந்த நிறங்களின் கலவையே சிறந்த தேர்வாக இருக்கும். பளிச்சென இருக்கும் இந்த நிறங்கள் கண்டிப்பாக உங்களை தனியாக எடுத்துக் காட்டும்.

ஒருவருக்கொருவர் உங்கள் ஆடை நிறத்தை பார்த்து பாராட்டி கொள்ளும் அளவிற்கு நிறத்தை தேர்ந்தெடுங்கள். சொல்லப்போனால் கரை அல்லது துப்பட்டா அல்லது ஒட்டு மொத்த தோற்றத்தில் நிறங்களின் சேர்க்கை நன்றாக இருக்க வேண்டும்.

ஆடையை கவனமாக தேர்ந்தெடுங்கள்

ஆடையை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டிய உங்களின் வசதியை பற்றி தான். ஆனால் அதற்காக ஸ்டைலை மறந்து விடக்கூடாது.

அனார்கலி அல்லது சல்வார் கமீஸ் அல்லது குர்தா தான் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் மரபு சார்ந்த வழியில் ஆடை அணிய வேண்டும் என விருப்பப்பட்டால் சேலை, லெஹெங்கா அல்லது காக்ராவிற்கு மாற்றாக இவைகளை அணியலாம். முடிந்த வரையில் அவைகளில் எம்பிராய்டரி போட்டுக் கொள்ளலாம்.

ஆனால் அவை கழுத்து வரை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் மெஹந்தி கரையால் அவை பாதிக்கப்படும் என்ற அச்சம் வேண்டாம். இருப்பினும், உங்களுக்கு நாகரீகமான தோற்றம் வேண்டுமானால் வசதியான ஷார்ட்ஸ், முட்டி நீளத்திற்கு இருக்கும் பேன்ட்கள் அல்லது முட்டி நீளத்திற்கு இருக்கும் சட்டைகளை அணியலாம்.

இதனோடு எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து கொள்ளலாம். கண்டிப்பாக அன்றைய நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப்போவது நீங்களாகத் தான் இருப்பீர்கள். மேற்கூறியபடி உங்களை கற்பனை செய்து பாருங்கள், அப்போது புரியும்.

நகைகளின் மீது சமரசம் செய்யாதீர்கள்

சடங்கு வீட்டில் நடந்தாலும் சரி அல்லது வேறு இடத்தில் நடந்தாலும் சரி, நீங்கள் அணியும் நகைகளோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நகைகளை தேர்ந்தெடுக்கவும். அது முக்கிய முக்கியமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply