முள்ளங்கி சப்பாத்தி

Loading...

முள்ளங்கி சப்பாத்திமுள்ளங்கி – ஒன்று
கோதுமை மாவு – ஒரு கப்
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவியவற்றை லேசாக பிழிந்து கொள்ளவும்.
அதோடு கோதுமை மாவு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், நெய் சேர்த்து சமமாக கிளறவும்.
அதில் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு பிசையவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக போடவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சுடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply