முளைக்கட்டிய பாசிப்பருப்பு தக்காளி சாலட்

Loading...

முளைக்கட்டிய பாசிப்பருப்பு தக்காளி சாலட்தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பாசிப்பருப்பு – 1 1/2 கப்
தக்காளி – 2
வெள்ளரிக்காய் – 1 பெரியது
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• முதலில் ஒரு பௌலில் மிளகு தூள், உப்பு, வறுத்த சீரகப் பொடி, எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி சாறு, ஆலிவ் ஆயில் என அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

• பின் பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, முளைக்கட்டிய பாசிப்பருப்பை போட்டு, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்துவிட்டால், அடுப்பில் இருந்து இறக்கி, 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

• பின் அதனை குளிர வைத்து, பௌலில் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கலந்து, அதன் மேல் தக்காளி, கொத்தமல்லி மற்றும் வெள்ளரிக்காய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான முளைக்கட்டிய பாசிப்பருப்பு தக்காளி சாலட் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply