முல்தானி மெட்டியின் பயன்கள்!

Loading...

முல்தானி மெட்டியின் பயன்கள்!முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது.

* முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவும். 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.

* இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.

* புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.

* ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சரிசமமான அளவில் கலந்து ஹேர் பேக் ஒன்றை தயார் செய்திடவும். இதனை தலைச்சருமத்திலும் முடியிலும் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரை கொண்டு தலையை கழுவுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு, முடியை கழுவுங்கள். பொடுகை சிறந்த முறையில் குறைக்க இந்த வீட்டு சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பின்பற்றவும்.

முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்க இது கண்டிஷனராகவும் செயல்படும். உங்கள் முடியை முல்தானி மெட்டி கொண்டு அடிக்கடி கழுவுங்கள். இதனால் உங்கள் முடி ஈரப்பதத்துடன் விளங்கி, நுனிகள் பிளவுபடுவது தடுக்கப்படும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply