முதுமையிலும் அழகாக இளமையாக தோற்றமளிக்க

Loading...

முதுமையிலும் அழகாக இளமையாக தோற்றமளிக்கவயது ஐம்பதை தாண்டியும் அழகாக இளமையாக தோற்றமளிக்க சில வழிமுறைகள்
முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி மிக இளமையான தோற்றம் பெறுவதற்காக, முகத்திலே போடப்படும் “பொடாக்ஸ் ஊசி முறைகள்” (Botox injections) மற்றும் அழகியல் மருத்துவத்துறையில் செய்யப்படும் “மைக்ரோ டெர்மாப்ரேஷன்” (Microdermabrasion) எனப்படும் அறுவை சிகிச்சை முறை, முகத்தின் அழகிற்கு பொருத்தமானதாகவோ மற்றும் அதற்கென ஆகும் செலவு பட்ஜெட்டிற்குள் அடங்குவதாகவோ இல்லை.

எனவே முகத்திற்கான மசாஜ் முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் தான் மிகவும் சிறந்த வழி. இவ்வாறு செய்வதால், முகத்திலுள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, அங்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சுருக்கங்கள் குறைந்து, அழகிய முகத்தோற்றம் அடைய பெரிதும் உதவுகிறது. இதனால் இளமை என்னும் நீரூற்றைப் பருகியதைப் போல் உணர முடியும்.

நெற்றியிலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்கான பயிற்சி முறை:
இரண்டு புருவங்களையும் அடிக்கடி உயர்த்துவதன் மூலம் நெற்றியில் ஆழமான சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க முடியும். மேலும் நடுவிரல் மற்றும் கட்டை விரலை இரு புருவங்களின் மீதும் வைத்து மேல் நோக்கி இழுத்து விட வேண்டும். அத்துடன் இரண்டு புருவங்களையும் குறைந்தது 10 முறை உயர்த்தி உயர்த்தி பயிற்சி செய்யவேண்டும்.

நெற்றிச் சுருக்கங்களை நீக்குவதற்கான பயிற்சி முறைகள்: காகத்தின் கால்களைப் போன்று அமைந்துள்ள நெற்றிச் சுருக்கங்களை நீக்குவதற்கு, இரண்டு கண்களையும் நன்கு மூடி, இரு புருவங்களையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்படி 3 விநாடிகள் செய்த பிறகு, சில விநாடிகள் ஓய்வெடுத்து பின் மீண்டும் செய்ய வேண்டும்.

தாடை மற்றும் கழுத்திற்கான பயிற்சி முறைகள்:
தரையில் நின்று கொண்டு, கழுத்தை பின்புறம் சாய்த்து மேற்புறக் கூரையை நன்கு கூர்ந்து பார்க்க வேண்டும். அப்படியே இரு உதடுகளையும் மேற்கூரையை நோக்கி முத்தமிடுவது போல நன்கு குவிக்க வேண்டும்.

இவ்வாறு 5 விநாடிகள் இருந்து, பின் ஓய்வு எடுத்து, பின் மீண்டும் செய்யவும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.முகத்திற்கான மசாஜ் முறைகள்:முகத்தை தொடர்ந்து மசாஜ் செய்வதால், தோல் மிக மிருதுவாகவும், உறுதியாகவும் அமைகிறது.

“மசாஜ் தெரபி 101” ( Massage Therapy 101) என்ற நூலில் பரிந்துரைத்துள்ள மசாஜ் முறைகள் மற்றும் பயிற்சி முறைகள்

முகத்தை நன்கு கழுவி விட்டு, முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்க ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசரைத் தடவவும்.

வறண்ட சருமத்திற்கு பூரித கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய் வகைகளையும் (அதாவது, தேங்காய் எண்ணெய்), எண்ணெய் பசையுடைய சருமத்திற்கு நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய் வகைகளையும் (அதாவது, ஆலிவ் எண்ணெய்) தடவவும்.நீங்களாகவோ அல்லது பயிற்சி பெற்ற ஒருவர் மூலமாகவோ முகத்திற்கு மசாஜ் செய்தாலும், 20 நிமிடங்களுக்கு மேலாக செய்யக் கூடாது. மேலும் மிக மெதுவாக செய்ய வேண்டும். நெற்றியிலும் முகத்திலும் மசாஜ் செய்யும் பொழுது பக்கவாட்டு ( Horizontal) சுருக்க வரிகள் குறைகிறது.

கன்னங்களையும் வாய்ப்பகுதியையும் மசாஜ் செய்யும் பொழுது புதிய சுருக்கங்களோ தொய்வோ ஏற்படாமல் காக்கிறது. கழுத்து சதைப்பகுதி வலுவாக இருக்கவும், தொய்வு ஏற்படாமல் இருக்கவும், மெதுவாக மசாஜ் செய்ய மறந்து விட வேண்டாம்.

ஐம்பது வயதிற்கு மேலும் அழகாக இருப்பது எப்படி? சில அறிவுரைகள்.
சிலர் ஐம்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள். மேலும் அவர்களுடைய எண்ணம் மற்றும் செயல் வேகம் இருபது வயதிலிருப்பவர்களுடன் போட்டி போடுவதாக இருக்கும்.

இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது. அந்த வகையில் நீங்கள் ஐம்பது வயதை கடந்தவரா? ஐம்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படியெனில் ஐம்பது வயதிலும் அழகாக தோற்றமளிப்பதற்கான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம், படித்துப் பயன்பெறுங்கள்.

1. உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

2. தலைமுடியை சரியாக கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். சாதரணமாக 60-வயதை கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும். இவ்வாறு செய்வது வயதாவதை தடுக்க நடக்கும் போரில், தோல்வியடைந்து கொண்டிருப்பதை குறிக்கும்.

3. தலைமுடியின் நீளத்தை கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் இது வேறுபடுவதை நாம் மறுக்க முடியாது.

4. சரியான எடையை பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

5. அதிகப்படியான மேக்-கப் வேண்டாமே! வயதாகும் போது குறைந்த அளவு மேக்-கப் தான் அழகாகவும், இயற்கையானதாகவும் இருக்கும்.

நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும், கண்ணின் வெளிப்பகுதிகளுக்கும் பிரௌன் அல்லது கிரே நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கருமை நிறத்தில் இருந்தால், கருப்பு நிற மையை பயன்படுத்த வேண்டாம்.
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.

நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

மேலும் சில வழிமுறைகள்:

நீர்ச் சத்து குறைபாடு
முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நாவறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கழுத்து சுருக்கம் போக்க
வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கண்ணக் குழி தவிர்க்க
இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

இயற்கையை ரசியுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்… கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply