முட்டை மசாலா

Loading...

முட்டை மசாலாமுட்டை – 5
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
கறிவேப்பிலை – 10 இலை
கொத்தமல்லி – ஒரு கைபிடியளவு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி

முட்டையை வேகவைத்து எடுத்து ஓட்டை பிரித்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் முட்டையை கத்தியால் கீறிவிட்டு அதில் போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து எடுத்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply