முட்டை குருமா

Loading...

முட்டை குருமாமுட்டை – 6
பால் – 1/2 கப்
வெங்காயம் – 6
முந்திரி – 10
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் அல்லது நெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு
அரைக்க:
மிளகாய் – 6
துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
மல்லி தூள் – 3 ஸ்பூன்
கிராம்பு – 5
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 2
இஞ்சி – 1 துண்டு
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

முட்டை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியாக அடித்துக் கொள்ளவும்.
வெள்ளை கருவில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் கரு மற்றும் பாலை சிறிது சிறிதாக வெள்ளை கருவில் சேர்க்கவும்.
மறுபடியும் இந்தக் கலவையை 10 நிமிடங்கள் நன்றாக அடித்து கலக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி முட்டை கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
கெட்டியானதும் முட்டை கலவையை சிறு துண்டுகளாக (பனீர் போல) வெட்டிக்கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி முந்திரியை வறுத்து வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
தீயைக்குறைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
முட்டை துண்டுகளை சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply